முகப்பு

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி 
என்றென்றும் வாழியவே!
                                                              –பாரதியார் 

 நம் தாய் மொழியான தமிழ் மொழியை நமது சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அரசி நகர தமிழ்ப் பள்ளி செப்டம்பர் 2010ல் தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. சார்லட் நகர தமிழ் சங்கத்தின் ஒரு அங்கமாக உள்ளது. சார்லட், அதைச்சுற்றி வாழும் குழந்தைகள் தமிழ் மொழியில் படிக்க, எழுத மற்றும் பேசக் கற்றுத் தருவதை இதன் முக்கிய நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

பள்ளி முழுவதும் தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். அவர்களில் 30 பேர் ஆசிரியர்களாக உள்ளனர். பள்ளியில் 200+ மாணாக்கர்கள் இந்த ஆண்டு பதிவு செய்துள்ளனர். மழலை முதல், நிலை 1, 2, 3, 4, 5, 6, 7 என எட்டு நிலைகள் உள்ளன. பள்ளியில் நூலகம் உள்ளது. தன்னார்வலர்கள்  ஒவ்வொரு வகுப்பிற்கும் தொடர்ந்து வந்து தங்களது பொன்னான நேரத்தைத் தந்து நமது பள்ளியின் வளர்ச்சியில் உறுதுனையாக இருந்து வருகின்றனர்.

நீங்களும் நமது தமிழ்ப்பள்ளியின் ஒரு அங்கமாக இருந்து உதவ விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இடம்:

தெற்க்குக் கிளை: Metrolina Regional Scholars Academy 

5225 Seventy-Seven Center Drive, Charlotte, NC 28217

நேரம்:

சனிக்கிழமை மதியம் 1:55 மணி முதல் மாலை 4:00 மணி வரை

மற்றும்

வடக்குக் கிளை: Charles Mack Citizen Center

215 N Main Street, Mooresville, NC 28115

நேரம்:

ஞாயிறு மாலை 1:55 மணி முதல் மதியம் 4:00 மணி வரை  

Announcements:

Visit us and like us in Facebook https://www.facebook.com/arasi.nagara.tamil.palli